அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!!

சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக டெய்சி மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெய்சி மார்ட்டின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “14 ஆண்டுகளாக ஒருவரது வாழ்வில் மற்றொருவர் அங்கமாக இருந்த நிலையில், நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைவர்களாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையின் பல்வேறு அத்தியாயங்களை ஒன்றாகக் கடந்து வந்த இந்தப் பயணம் அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்ததாக இருந்துள்ளது.

இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் தம்பதியராகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க பரஸ்பரம் முடிவெடுத்துள்ளோம்.

இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்தாலும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதிலும் எங்களது அர்ப்பணிப்பு எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் தேர்ந்தெடுத்து முன்னெடுக்கும் அனைத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.

இந்த மாற்றத்தை நாங்கள் கடந்து செல்லும் இவ்வேளையில், உங்களது புரிதலையும், அன்பையும், எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் மனதாரக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் லீமா ரோஸ் ஆகியோரின் மகளான டெய்சி மார்ட்டினை, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆதவ் அர்ஜுனா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *