மதுரை நகைக்கடை கொள்ளையன் நிஷாந்தை டிச.1 வரை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவு!!

மதுரை:
மதுரை நகைக்கடை கொள்ளையன் நிஷாந்தை டிச.1 வரை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்திரவிட்டார்.

மதுரை நகைக்கொள்ளையில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் நேற்று (நவ.16) தர்மபுரி அருகே கைது செய்யப்பட்டார்.

மதுரைக்கு அழைத்து வரப்பட்ட அவரை ரகசிய இடத்தில் வைத்து மாநகர துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் தனிப்படையினர் துருவித் துருவி விசாரித்தனர்.

கொள்ளை சம்பவம் குறித்தும், நகைகளை பதுக்கியது, கொள்ளைக்கு பின்னணியில் யார், யார் இருந்தனர் போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி தகவல்களை திரட்டினர்.

இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இன்று காலை அவரை மதுரை மாவட்ட 5-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி பிரியா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் அவர் உபயோகப்படுத்திய பைகளை நீதிபதியிடம் போலீசார் காண்பித்தனர்.

பின்னர் நிஷாந்தை டிசம்பர் 1 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *