ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய ரஷியாவின் டேனில் மெத்வதேவ்!!

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ரஷியாவின் டேனில் மெத்வதேவ் முன்னேறினார்.

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.


இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபெ உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6 4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஏற்கனவே ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.


இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் அல்காரசும், பென் ஷெல்டனும் மோதுகின்றனர். நாளை அதிகாலை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஸ்வரேவும், மெத்வதேவும் மோதுகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *