அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாக எழுந்த வழக்கில் இந்தியரான நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!!

நியூயார்க்:
அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாக எழுந்த வழக்கில் இந்தியரான நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

வெள்ளிக்கிழமை அன்று சுமார் 80 நிமிடங்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இதில் அமெரிக்க தேசத்தில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி செய்த குற்றத்துக்காக 235 மாதங்கள் (19 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள்) சிறை தண்டனை விதித்தார் நியூயார்க் தெற்கு பகுதி நீதிபதி விக்டர்.

காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் கடந்த 2023-ல் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா கடந்த 2024-ல் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை அறிவித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *