தமிழக மின்​வாரியத்​தில் டெண்டர் நடைமுறைகளை விரைவு படுத்தும் வகை​யில், ரூ.100 கோடி வரையிலான பணிகளுக்கு ஒப்​புதல் அளிக்​கும் புதிய டெண்​டர் குழு அமைப்பு!!

சென்னை:
தமிழக மின்​வாரியத்​தில் டெண்டர் நடைமுறைகளை விரைவு படுத்தும் வகை​யில், ரூ.100 கோடி வரையிலான பணிகளுக்கு ஒப்​புதல் அளிக்​கும் புதிய டெண்​டர் குழு அமைக்​கப்​பட்​டுள்ளது.

மேலும், வாரிய நிலை டெண்டர் குழு​வின் நிதி அதி​கார​மும் இரு​மடங்​காக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக மின்​வாரியத்​தின் 141-வது வாரியக்கூட்​டம் கடந்த நவ.11-ம் தேதி நடை​பெற்​றது.

இதில், தற்​போதுள்ள தலை மையக உயர்​மட்ட டெண்​டர் குழு மற்​றும் வாரிய நிலை டெண்​டர் குழு ஆகிய​வற்​றுக்கு இடையே புதிய குழு ஒன்றை உரு​வாக்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

இதையடுத்து, மின்​கழகத்​தின் தலைமை நிதி கட்​டுப்​பாட்டு அதி​காரி சவிதா தற்போது புதிய உத்​தரவைப் பிறப்​பித்​துள்​ளார்.

இது​குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) தலை​மையில் “ஜேஎம்டி நிதி நிலை டெண்​டர் குழு” என்ற புதிய குழு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இதில் இணை மேலாண்மை இயக்​குநர் (பகிர்​மானம்), இயக்​குநர் (நிதி), இயக்​குநர் (பகிர்​மானம்) மற்​றும் டெண்​டர் முன்​மொழிவைச் சமர்ப்​பிக்​கும் சம்​பந்​தப்​பட்ட தலை​மைப் பொறி​யாளர் ஆகியோர் உறுப்​பினர்​களாக இருப்​பார்​கள்.

இந்​தப் புதிய குழு​வுக்கு ரூ.50 கோடி வரையி​லான தளவாடங்​கள் கொள்​முதல் டெண்​டர்​களுக்​கும் ரூ.100 கோடி வரையி​லான ஒப்​பந்​தப் பணிகளுக்​கும் ஒப்​புதல் அளிக்​கும் அதி​காரம் கொண்டதாகும்.

இதேபோல், தற்​போதுள்ள வாரியநிலை டெண்​டர் குழு​வின் நிதி அதி​கார​மும் மாற்​றியமைக்கப்படு​கிறது. இதன்​படி, தளவாடங்கள் கொள்​முதல் டெண்​டர்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கும் வரம்பு ரூ.40 கோடி​யி​லிருந்து ரூ.80 கோடி​யாகவும் ஒப்​பந்​தப் பணிகளுக்​கான வரம்பு ரூ.80 கோடி​யி​லிருந்து ரூ.160 கோடி​யாகவும் உயர்த்​தப்​படு​கிறது.

இந்த தொகைக்கு மேற்​பட்ட மதிப்​பிலான டெண்​டர்​கள் மட்​டுமே வாரியத்​தின் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​படும். அதேநேரம், செயற்​பொறி​யாளர், மேற்​பார்​வைப் பொறி​யாளர், தலை​மைப் பொறியாளர் மற்​றும் தலை​மையக உயர்​மட்ட டெண்​டர் குழு (ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரையிலான வரம்பு) ஆகியோரின் தற்​போதைய டெண்​டர் அதி​காரங்​களில் எந்த மாற்​றமும் செய்​யப்​பட​வில்லை. இவ்​வாறு அந்த அறிக்கையில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *