நடிகை ரம்பாவின் இல்லத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்ற பிரபுதேவா!!

கனடாவின் டொராண்டோ நகரில் வசித்து வரும் நடிகை ரம்பாவின் இல்லத்திற்கு பிரபுதேவா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

ரம்பாவின் வீட்டுத் தோட்டத்திலும், அருகிலுள்ள ஏரி போன்ற நீர்நிலையின் பின்னணியிலும் இருவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளனர்.
மேலும், ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் பிரபுதேவா மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்ட புகைப்படங்களையும் ரம்பா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரம்பாவின் நெகிழ்ச்சிப் பதிவு
இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ரம்பா, “பிரபு மாஸ்டர் எங்களுடன் இருக்கிறார். அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் மிகச் சிறந்த நேரத்தைச் செலவிட்டோம். எங்கும் மகிழ்ச்சியான தருணங்கள்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

‘வி.ஐ.பி’ (1997) மற்றும் ‘காதலா காதலா’ (1998) ஆகிய படங்களில் இவர்களின் கெமிஸ்ட்ரி மற்றும் நடனம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்களை ஒன்றாகப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தப் பதிவிற்குக் கருத்து தெரிவித்துள்ள நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு சுந்தர், “இசை ஒலிக்கும்போது உங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பதை வேறு எதனாலும் மிஞ்ச முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, 2018-ம் ஆண்டு நடைபெற்ற ‘டா-பாங்’ (Da-Bangg) சுற்றுப்பயணத்தின் போதும் இவர்கள் இருவரும் கனடாவில் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய திரைப்பயணங்கள்

1992-ல் ‘சர்க்கம்’ படத்தின் மூலம் அறிமுகமான ரம்பா, 2010-ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனைத் திருமணம் செய்து கொண்டு கனடாவில் குடியேறினார். 2011-க்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், தற்போது ‘Jodi Are U Ready’ சீசன் 2 நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றி வருகிறார்.

பிரபுதேவா கடைசியாக ‘பேடாஸ் ரவிகுமார்’ படத்தில் நடித்திருந்த பிரபுதேவா கைவசம் தற்போது ‘கத்தனார்’ (Kathanar), ‘மூன்வாக்’ (Moonwalk), ‘பேங் பேங்’ (Bang Bang), ‘சிங்காநல்லூர் சிக்னல்’ (Singanallur Signal), ‘ஃபிளாஷ்பேக்’ (Flashback), ‘மகாராணி’ (Maharagni) மற்றும் ‘முசாசி’ (Musasi) ஆகிய படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *