ஆளுநரை போஸ்ட்மேன் என மேடையில் பேசிய உதயநிதி தற்போது அதே ஆளுநரை சந்திப்பது ஏன்? – மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி… !!

கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் அர்லேகரை சந்தித்து த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ஆளுநரை போஸ்ட்மேன் என மேடையில் பேசிய உதயநிதி தற்போது அதே ஆளுநரை சந்திப்பது ஏன்?

* ஆளுநரை போஸ்ட்மேன் எனக்கூறிவிட்டு தற்போது போஸ்ட்மேன் வீட்டில் உதயநிதிக்கு என்ன வேலை?

* ஆளுநர், பாஜகவிடம் தி.மு.க. சரண் அடைந்து விட்டதா?

* யார் தவறு செய்தாலும் தண்டனை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

* ஒரு மாநிலத்திற்கு ஆளுநர் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் காங்கிரஸ் கட்சி உள்ளது.

* அரசியல் செய்யாமல், ஆளுநர்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. மாநில அரசுக்கு பிரச்சனை செய்யக்கூடாது.

* திமுக நிர்வாகிகள் மீதான ED வழக்குகளுக்காக செட்டில்மென்ட் முடிந்ததா?

* காலம் காலமாக எதிர்த்துவிட்டு தற்போது வாலை சுருட்டிக் கொண்டு சென்று நிற்கிறது திமுக

* கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

* முட்டுக்கொடுப்பது என்றால் என்னவென்று தெரியுமா? என் தி.மு.க. ஐ.டி.விங்கிற்கு கேள்வி எழுப்பினார்.

* நல்ல அரசான த.வெ.க. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுக ஐடி விங் முயற்சி செய்கிறது.

* தவெக அமைச்சர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு கூட இல்லை.

* தவெக அரசாங்கம் எங்களுடைய அரசாங்கம், எந்த துறையில் குறை இருந்தாலும் தெரிவித்து வருகிறோம் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *