சட்​ட ​விரோத​மாக வசிக்​கும் வங்​கதேச, ரோஹிங்​கியா ஊடுரு​வல்​காரர்​கள் மீது கடும் நடவடிக்கை – உ.பி. முதல்வர் ஆதித்​ய ​நாத் வேண்டுகோள்!!

லக்னோ:
உ.பி.யில் வங்​க தேசத்​தினரும் ரோஹிங்​கி​யாக்​களும் சட்​ட​விரோத​மாக ஊடுருவி இருப்​ப​தாக​வும் அவர்​கள் உள்​ளூர் மக்களைப் போல ஆதார் எண், வாக்​காளர் அட்டை உள்​ளிட்ட இந்திய அடை​யாள ஆவணங்​களைப் பெற முயற்​சிப்​ப​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது.

இதைத் தடுப்​ப​தற்​கான முயற்​சி​யில் காவல்துறை​யினரும் நிர்வாகத் துறை​யினரும் இணைந்து செயல்​பட்டு வரு​கின்​றனர். சந்​தேக நபர்​களைப் பிடித்து விசாரிக்கின்​றனர்.

இந்​நிலை​யில், உ.பி.முதல்​வர் ஆதித்​ய ​நாத் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “மாநிலத்​தின் பாது​காப்​பு, சமூக நல்​லிணக்​கம் மற்​றும் சட்​டம் ஒழுங்கு ஆகிய​வற்​றுக்கு அரசு முன்​னுரிமை வழங்கி வரு​கிறது.

இங்கு சட்​ட ​விரோத​மாக வசிக்​கும் வங்​கதேச, ரோஹிங்​கியா ஊடுரு​வல்​காரர்​கள் மீது கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, எந்த ஒரு தனி நபரை​யும் வீட்டு வேலைக்கோ அல்​லது வணிக நடவடிக்​கை​யிலோ பணி அமர்த்​து​வதற்கு முன்​பு, அவர்களின் அடை​யாளத்தை முழு​மை​யாக பரிசோ​திக்க வேண்டும். மாநிலத்​தின் பாது​காப்பு என்​பது நம் அனை​வரின் கூட்டுப்பொறுப்பு ஆகும்” என கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *