திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு!!

சென்னை: ​
தி​முக பூத் கமிட்டி மாநாடு முதல்​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மை​யில் திருவிடந்தையில் இன்று நடை​பெறுகிறது. இதில் 1.50 லட்​சம் நிர்​வாகி​கள் கலந்து கொள்​கின்​றனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, திமுக மண்டல வாரி​யாக இளைஞரணி சந்​திப்​பு, மகளிரணி மாநாடு​கள், 234 தொகு​தி​களி​லும் பொதுக் ​கூட்​டங்​கள், தெரு​முனைக் கூட்​டங்​கள், ஒவ்​வொரு தொகு​தி​யிலும் உள்ள முக்​கியப் பிர​முகர்​களு​டன் ஆலோ​சனை, வீடு​வீ​டாக பிரச்​சா​ரம் என பல்​வேறு செயல்​பாடு​களை முன்​னெடுத்து வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக, வாக்​குச்​சாவடி அளவி​லான கட்​டமைப்பை வலுப்​படுத்த ‘என் வாக்​குச்​சாவடி – வெற்றி வாக்​குச்​சாவடி’ என்ற இயக்​கத்தை திமுக முன்​னெடுத்​தது.

இதையடுத்​து, பூத் ஏஜென்ட்​டு​களை தேர்​தல் பணிக்கு முழு​மை​யாக தயார் செய்​வதற்​காக, பயிற்சி மாநாடு​கள் 4 மண்​டலங்​களில் நடத்​தப்பட இருக்​கின்​றன.

அதன்​படி, சென்னை மற்​றும் விழுப்​புரம் மாண்​டலங்​களுக்​கான மாநாடு, காஞ்​சிபுரம் மாவட்​டம், திருவிடந்தையில் இன்று (11-ம் தேதி) நடை​பெறுகிறது.

இதில், சுமார் 1.5 லட்​சம் வாக்​குச்​சாவடிக் குழு​வினர் கலந்து கொள்​கின்​றனர். வரும் தேர்​தலில் திமுக​வினர் எப்​படி களப் பணி​யாற்ற வேண்​டும், வாக்​குச்​சாவடி முகவர்​கள் எப்​படி பணி​யாற்ற வேண்​டும் என்​பது குறித்து திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் ஆலோ​சனை வழங்​கு​கிறார்.

தொடர்ந்​து, வடக்கு மண்டல மாநாடு திருப்​பத்​தூரில் வரும் 14-ம் தேதி​யும், தெற்கு மண்டல மாநாடு மதுரை​யில் 21-ம் தேதி​யும், மேற்கு மண்டல மாநாடு கோவை​யில் 27-ம் தேதி​யும் நடை​பெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *