மஹிந்திரா நிறுவனத்தின் BE 6 பார்முலா E எடிஷன் காரை வாங்கிய நடிகர் அஜித்குமார்!!

சென்னை:
மஹிந்திரா நிறுவனத்தின் BE 6 பார்முலா E எடிஷன் காரை நடிகர் அஜித் குமார் வாங்கி உள்ளார். இந்நிலையில், நிச்சயம் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பேன் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். கார் ரேஸரான அவர், தொழில்முறை கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை தொடங்கினார்.

இதில் அஜித்தும் ரேஸராக கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அவரது ரேஸிங் அணி சர்வதேச நாடுகளில் பல்வேறு கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறது.

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் BE 6 பார்முலா E எடிஷன் காரை அஜித் வாங்கியுள்ளார்.

இந்த காரை அவருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் புராடெக்ட் டெவலப்மென்ட் தலைவர் வேலுசாமி டெலிவரி செய்துள்ளார். இது குறித்த படங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

அதை ரீ-ட்வீட் செய்த தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, “வெகு விரைவில் ஒருநாள் அஜித் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஸ்பெயினில் மஹிந்திரா நிறுவனத்தின் பார்முலா காரை அஜித் இயக்கி, சோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *