அமமுகவுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு !!

சென்​னை:
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர்களையும் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

வரும் நாட்களில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். 120 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையையும் தினகரன் வெளியிட்டார். இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

அமமுகவுக்கு பொதுச்சின்னமாக பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தினகரன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு இருப்பதால், அந்த சின்னம் மக்கள் அறிந்த சின்னமாக உள்ளது.

அதனால் கூட்டணியில் உள்ள அமமுகவுக்கு வெற்றி எளிதாக இருக்கும் என அக்கட்சியினர் கருதுகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *