28-ந் தேதி (செவ்வாய்)
- திருநெல்வேலி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் வருசாபிஷேகம்.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.
- திருவள்ளூர் வீரராகவர் ரத உற்சவம்.
- மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (புதன்)
- பிரதோஷம்.
- திருநெல்வேலி சந்தான கோபால நவநீத கிருஷ்ணர் வருசாபிஷேகம்.
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
- திருஉத்திரகோசமங்கை மங்களேசுவரி திருக்கல்யாணம்.
- சமநோக்கு நாள்.
30-ந் தேதி (வியாழன்)
- முகூர்த்த நாள்.
- நரசிம்ம ஜெயந்தி.
- திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
- இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
- சங்கரன்கோவில் சிவபெருமான் வெள்ளி ரிஷப சேவை.
- சமநோக்கு நாள்.
1-ந் தேதி (வெள்ளி)
- சித்ரா பவுர்ணமி.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சித்திரை உற்சவம் ஆரம்பம்.
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்.
- திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்.
- சென்னை சென்னகேசவப் பெருமாள் விழா தொடக்கம்.
- சமநோக்கு நாள்.
2-ந் தேதி (சனி)
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை தேனூர் மண்டபம் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளுதல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.
- திருவல்லிக்கேணி பார்த்தசார திப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
- சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம்.
- கீழ்நோக்கு நாள்.
3-ந் தேதி (ஞாயிறு)
- சென்னை சென்னகேசவப் பெருமாள் சந்திர பிரபையில் பவனி.
- வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா.
- கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (திங்கள்)
- அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
- திருமாலிருஞ்சோலை கள்ளழகர் மலைக்கு புறப்பாடு.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- சமநோக்கு நாள்.