திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி!!

திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார்.

திருப்பத்தூர் தொகுதியில் தபால் வாக்குகளையும் சேர்த்து திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 212 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில், 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயங்காததால், அதற்குரிய விவி பேட் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி முன்னிலை பெற்றார்.

தேர்தல் முடிவை அலுவலர் அறிவிக்க தயாரான போது, மறு வாக்கு எண் ணிக்கை நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பிரச்சினை ஏற்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலர் பொற்கொடி, ‘தேர்தல் ஆணைய விதிமுறையின்படி வெற்றிபெற்ற வாக்குகள் வித்தியாசத்தை விட செல்லாத வாக்குகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதை மறு ஆய்வு செய்யலாம்’ என்றார்.

இதையடுத்து, தபால் வாக்குகளில் உள்ள செல்லாத வாக்குகளை அலுவலர்கள் மறு ஆய்வு செய்தனர். அதில், செல்லத்தக்க வாக்குகள் எதுவும் இல்லை என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தவெக வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளும், கே.ஆர்.பெரியகருப்பன் 83,364 வாக்குகளும் பெற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *