சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

நடிகை சமந்தா நீண்டநாட்களுக்கு பிறகு தெலுங்கில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் மா இன்டி பங்காரம். ‘ஓ பேபி’ படத்திற்குப் பிறகு சமந்தாவுடன் மீண்டும் இணையும் இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் குல்ஷன் தேவையா, கௌதமி, ஸ்ரீமுகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1980-களில் நடப்பது போன்ற ஒரு குடும்ப பின்னணி கொண்ட அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் சமந்தா அமைதியான மருமகளாகவும், அதே சமயம் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு அதிரடிப் பெண்ணாகவும் நடித்துள்ளார்.

இப்படம் முதலில் மே 15 வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *