குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என 6 ‘சூப்பர் ஆடுகள்’ – சீனா சாதனை!!

சீனா;
ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது.

உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது.

இது கால்நடைத் துறையில் ஒரு பெரிய சவாலாக இருந்து வந்தது. இந்த நீண்ட காலக் காத்திருப்புக்குச் சீன விஞ்ஞானிகள் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சீனாவின் ‘நார்த்வெஸ்ட் ஏ அண்ட் எப்’ பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர், ஆண்டுக்கு 2 ஆயிரத்து 800 கிலோவுக்கும் அதிகமாகப் பால் தரும் ‘சானென்’ ரக ஆடுகளின் உடல் செல்களை எடுத்தனர்.

மேம்பட்ட குளோனிங் தொழில்நுட்பம் மூலம் ஆய்வகத்தில் புதிய கருக்களை உருவாக்கினர்.

இந்த சோதனையின் வெற்றியாக, தற்போது ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என 6 ‘சூப்பர் ஆடுகள்’ ஆரோக்கியமாகப் பிறந்துள்ளன.

இவை அனைத்தும் அசல் தாய் ஆடுகளைப் போலவே அதிக புரதச்சத்துள்ள பால் தரும் மரபணுத் திறனையும், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டுள்ளன.

சீனாவின் 15-வது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, நாட்டின் பால் உற்பத்தியைப் பெருக்க இந்த அதிநவீன தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *