மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்…

மேஷம்

தனவரவு திருப்தி தரும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

தொழில் ரீதியாக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

மிதுனம்

தாமதப்பட்ட காரியம் இன்று நடைபெறும். செல்வந்தர்களின் சந்திப்பால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

கடகம்

தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். வீடு கட்டும் பணி தொடரும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுச் சென்று பணிபுரிய நேரிடும்.

சிம்மம்

கொடுத்த கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் பிரச்சனை உருவாகும். மருத்துவச் செலவு உண்டு. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

துலாம்

மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள்.கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள், வரன்கள் முடிவாகும்.

தனுசு

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றித் தடைகளைத் தகர்த்தெறிவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.துலாம்

மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் வருமானங்கள் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

மகரம்

அரைகுறையாக நின்ற பணி தொடரும் நாள். வியாபார முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் உத்தியோகப் பிரச்சனை தீர வழிகாட்டும்.

கும்பம்

செல்வ நிலை உயரும் நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு வரலாம்.

மீனம்

வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளத் திட்டமிடுவீர்கள். நண்பர்களோடு இருந்த பிரச்சனை சமாதானமாக முடியும். தொழில் மாற்றுச் சிந்தனை மேலோங்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *