காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் விரிவாக்கம் – முதல்வர் விஜய் அறிவிப்பு!!

சென்னை:
முதல்வரின் காலை உணவுத் திட்டம் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங் கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ள துறை சார்பாக செயல்படுத்தக் கூடிய திட்டங்கள், அதற் குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்தா லோசிக்க ப்பட்டது.

மேலும், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர், குழந் தைகள், மூத்தகுடிமக்கள் ஆகியோருக்காக செயல்படுத்தப் படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை, தொடர்புடைய பயனாளர்களான குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்களிடம் தடையின்றி மற்றும் துரிதமாகக் கொண்டு சேர்க்கவேண்டும் எனவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகாதபடி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மேற்படி பழக்கத்திற்கு ஆளான குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் ம. பல்லவி பல்தேவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *