தவெக ஆட்​சி​யின் கடி​வாளத்தை திமுக, அதி​முக​விடம் ​தான் கொடுத்​துள்​ளனர் – தினகரன் கருத்து!!

சென்னை:
அமமுக நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம், சென்னை அடை​யாறில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டத்​தின் முடி​வில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

தவெகவுக்கு 108 இடங்​களில்​தான் மக்​கள் வெற்​றியை கொடுத்​தார்​கள், திமுக, அதி​முக கூட்​ட​ணிக்கு மொத்​தம் 126 எம்​எல்​ஏ.க்​களை கொடுத்​தார்​கள்.

இந்த 126 பேரும் தவெக​வுக்கு எதி​ராக போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர்​கள் என்​பதை விஜய்​யும், அவரைச் சுற்றி இருப்​பவர்​களும் மறந்​து​விடக்​கூ​டாது. இந்த ஆட்​சி​யின் கடி​வாளத்தை திமுக, அதி​முக​விடம்​தான் கொடுத்​துள்​ளனர்.

நடந்து முடிந்த தேர்​தலில் அனைத்து தொகு​தி​களி​லும் திமுக பல கோடி ரூபாய் செலவு செய்​த​தாக வைகோ தெரி​வித்​துள்​ளார்.

2024 மக்​கள​வைத் தேர்​தலில் திருச்​சி​யில் தீப்​பெட்டி சின்​னத்​தில் அவரது மகன் துரை வைகோ நின்​ற​போது, அதே திமுக செலவு செய்​து​தான் வெற்றி பெற்​றார் என்​பதை அவர் உணர வேண்​டும்.

காங்​கிரஸ் வேண்​டு​மா​னால் நம்​முடன் இருக்​கலாம். ஆனால் மற்ற கட்​சிகள் வெளி​யேறி​னால் ஆட்சி போய்​விடும் என்ற பயம் விஜய்க்​கும், அவரைச் சுற்றி இருப்​போருக்​கும் இருக்​கிறது.

அமமுக​வின் அனு​மதி பெறாமல் திருட்​டுத்​தன​மாக கட்சி எம்​எல்​ஏ​விடம் கடிதம் பெற்று ஆளுநரிடம் கொடுத்த வழக்கு நிலு​வை​யில் உள்​ளது. தேவைப்​படும்​போது அதை கையில் எடுப்​போம். அதில் முதல் குற்​ற​வாளி​யாக விஜய் இருப்​பார் என்றார்.

இக்​கூட்​டத்​தில் அமமுக துணை பொதுச்​செய​லா​ளர் ஜி.செந்​தமிழன் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *