பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசம் மீண்டும் நியமனம் !!

லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டில் அந்த அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்று விளையாடவுள்ளது.

இதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நேற்று அறிவித்தது.

பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசம் மீண்டும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் அங்கமாக உள்ளன.

பாகிஸ்தான் அணி விவரம்: பாபர் அசம்(கேப்டன்), ஆமிர் ஜமால், அப்துல்லா பசல், அலி உஸிமான், அசான் ஆவாயிஸ், இமாம் உல் ஹக், குர்ரம் ஷாசாத், முகமது அப்பாஸ், முகமது அலி, முகமது ரிஸ்வான், முகமது ஆவாயிஸ் ஜபர், முகமது காஜி கோரி, சஜித் கான், சல்மான் அலி அகா, ஷான் மசூத், உபைத் ஷா.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *