தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு ; ஊரகப் பகுதிகளில் பெண்களுக்காக ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்!!

சென்னை:
‘ஊரகப் பகுதிகளில் பெண்களுக்காக ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்’ தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்ஜெட்​டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்​கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில், ‘கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறைக்கு 8,028 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நெல் உற்பத்தி குறையாமல் இருக்க 134 கோடி ஒதுக்கீட்டில் குறுவை தொகுப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

விவசாயிகளுக்கு வழங்கும் மின் மானியத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கு 14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையில் வெளியான அறிவிப்புகள்:

ஊரகப்பகுதிகளில் பெண்களுக்காக ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். 30,000 பெண்கள் பயன டையும் இத்திட்டத்திற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

கால்நடை மருத்துவமனைகளுக்கு தேவையான 41 கட்டடங்கள் 47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

கால்நடை மருத்துவ சிகிச்சை தேவைகளை பூர்த்தி செய்ய 25 கால்நடை மருத்துவமனைகள் கால்நடை பல்நோக்கு மருத்துவ மனைகளாகவும், 210 கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனைகளாகவும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் 143 புதிய நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் ரூபாய் 35 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

கால்நடைகளின் எதிர்பாராத இழப்பினால் விவசாயிகளுக்கு நிதிச்சுமை ஏற்படாமல் இருக்க கால்நடைகள் காப்போம் என்ற திட்டத்திற்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கால்நடைகளுக்கு தரமான தீவனம் கிடைப்பதை உறுதி செய்ய தீவன விதை வங்கிகள் மற்றும் கிடங்குகள் 6.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

பசுந்தீவன சாகுபடியினை ஊக்குவிக்கவும், மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்பதற்கும் 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *