தொண்டாமுத்தூர் தொகுதியில் சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு பூஜ்ஜியமாக நிர்ணயி க்கப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் – எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு!!

சென்னை:
தொண்டாமுத்தூர் தொகுதியில் சில பகுதிகளில் நிலங்களின் மதிப்பு பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை சரி செய்ய வேண்டும் என்று சட்டப்பேரையில் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்திராயிருப்பு, இருட்டுபள்ளம், நரசிங்கபுரம், சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஊர்நத்தம் பூர்வீக சொத்து பூஜ்ஜிய மதிப்பீடாக தவறாக பதிவாகி உள்ளது.

இதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் சொத்தை விற்கவோ வாங்கவோ முடியவில்லை. இதற்காக தாலுகா அலுவலகம் சென்றால் காலதாமதம் ஆகிறது. எனவே, இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இப்பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *