நாங்கள் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட் டாலும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்; கே.என்.நேரு ‘ரெய்டு’ குறித்து ராஜ்மோகன் பதில்!!

சென்னை:
“லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார்.

நாங்கள் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட்டாலும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “எங்கள் முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அவர் ஆசைபட்டதுபோல விளையாட்டுத் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெறும்.

தூய்மைப் பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க விவகாரங்கள் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினோம்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ரீல்ஸ்கள் அதிகம் வருகிறது. இது மக்கள் அரசியல்மயப்படுவதற்கான அறிகுறி. சினிமா வசனங்களையும், நகைச்சுவை துணுக்குகளையும் பேசிக் கொண்டிருந்த வீடுகளில் இன்று சட்டப்பேரவை நிகழ்வுகள் பேசப்படுகிறது.

சட்டப்பேரவை நேரலை மூலமாக ஒரு தலைமுறையையே மாற்றிக்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய்.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பூர்வமாக எதிர்கொள்வார். கே.என்.நேரு மூத்த அரசியல்வாதி. நாங்கள் ஒரு ரூபாய் கூட தொட மாட்டோம், தொட்டாலும் விட மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *