ஆளுநருடன் பேரவைத் தலைவர் ஜேசிடி பிர​பாகர் சந்திப்பு!!

சென்னை:
தமிழக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரை, சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் கிண்​டி​யில் உள்ள மக்​கள் மாளி​கை​யில் நேற்று சந்​தித்​தார்.

அப்​போது சட்​டப்​பேர​வை​யில் பட்ஜெட் கூட்​டத்​தொடர் நிறைவு குறித்து இரு​வரும் கலந்​துரை​யாடினர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார்.

தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் உரை​யுடன் கடந்த ஜூன் 18-ம் தேதி தொடங்​கியது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீதான விவாதம் ஜூன் 23-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டு, பின்பு தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

அதனைத் தொடர்ந்​து, தமிழக சட்​டப்​பேர​வை​யில் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் கடந்த ஆக.5-ம் தேதி தொடங்​கியது.

மாநிலத்​தின் 2026-27 ஆண்​டுக்​கான பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்​தார். ஆக.6-ம் தேதி வேளாண் பட்​ஜெட்​டை, வேளாண் துறை அமைச்​சர் வினோத் தாக்​கல் செய்​தார். 7-ம் தேதி முதல் இரு பட்​ஜெட்​கள் மீதான விவாதம் நடை​பெற்​றது.

ஆக.12-ம் தேதி, இரு அமைச்​சர்​களின் பதி​லுரை​யுடன் விவாதம் நிறைவடைந்​தது. இதனைத் தொடர்ந்து துறை​வாரி​யாக மானிய கோரிக்​கைகள் மீதான விவாதம் சட்​டப்​பேர​வை​யில் ஆக.17-ல் தொடங்​கி, செப்​.8-ம் தேதி வரை நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் நேற்று மக்​கள் மாளி​கைக்கு சென்று ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரை சந்​தித்​தார்.

அப்​போது பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நிறைவடைந்​தது தொடர்​பாக இரு​வரும் கலந்​துரை​யாடினர். அப்​போது, பேர​வைத் தலை​வரின் அவை நடவடிக்​கைகள் மற்​றும் செயல்​பாடு​களை ஆளுநர் அர்​லேகர் பெரிதும் பாராட்​டி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *