சமந்தாவிற்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு விழா!!

சென்னை:
டைரக்டர் ராஜ்நிதிமோருவை 2-வதாக திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

முதன் முறையாக தாயாக போகும் மகிழ்ச்சியில் சமந்தா அடிக்கடி தனது கர்ப்பகால புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தாவிற்கு நேற்று குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு தனித்துவமான வழக்கம்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவித்யா மந்திரங்களை உச்சரித்து தாயாக போகும் பெண்ணிற்கு புனித நீரால் அபிஷேகம் செய்கிறார்கள்.

இதன் மூலம் அந்த பெண்ணிற்குள் இருக்கும் தெய்வீக குணங்கள் பெண்ணிடம் புகுத்தப்படுகிறது.

ஒவ்வொரு சடங்கின் பின்னணியில் உள்ள அர்த்தத்தை நான் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.

ஆனால் அவற்றுக்கு பின்னால் ஒரு வலிமையான சக்தியும் உள்ளார்ந்த அர்த்தமும் இருப்பதாக நம்பி வந்திருக்கிறேன்.

இது பெண் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கிடைக்கும் ஆசீர்வாதம் மட்டுமல்ல ஒரு புதிய வடிவத்திற்குள் ஒரு புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் அந்த பெண்ணுக்கும் கிடைக்கும் ஆசீர்வாதமாகும். இவ்வாறு அவர் பதிவிட்டார்.

விழாவில் கணவர் ராஜ்நிதிமோரு, சமந்தா தோழி ஷில்பா உள்பட நெருங்கிய குடும்பத்தினர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *