களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: பொது​மக்​களை வெகு​வாக கவர்ந்​த பிரம்​மாண்ட சிலைகள்!!

சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்​டி, சென்​னை​யில் பொது இடங்​களில் பிர​திஷ்டை செய்​யப்​பட்டு வழி​பாடு நடத்​தப்​பட்ட பிரம்​மாண்ட விநாயகர் சிலைகள் பொது​மக்​களை வெகு​வாக கவர்ந்​தது.

முழு​முதற் கடவுளான விநாயகப் பெரு​மானின் அவதார தின​மான விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழு​வதும் நேற்று முன்​தினம் கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்​டது.

தமிழகத்​தைப் பொருத்​தவரை சென்​னை​யில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. பொது​மக்​கள் வழி​பாட்​டுக்​காக சென்​னை​யில் 1,500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பிரம்​மாண்ட விநாயகர் சிலைகள் நிறு​வப்​பட்டு வழி​பாடு​கள் நடந்​தன.

கொளத்​தூர் பூம்​பு​கார் நகரில், 2,900 கண் திருஷ்டி கணபதி எந்​திரத் தகடு​கள் மற்​றும் 2,800 சூரிய சக்​கரத் தகடு​களால் உரு​வாக்​கப்​பட்ட 42 அடி உயர பிரம்​மாண்ட விநாயகர் சிலை நிறு​வப்​பட்​டுள்​ளது.

இந்த சிலை​யைத் தரிசிக்க சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான மக்​கள் திரண்டு வரு​கின்​றனர்.

அதே​போல், கொளத்​தூரின் மற்​றொரு பகு​தி​யில் 12 ஆயிரம் வலம்​புரி சங்​கு​கள் மற்​றும் 2 ஆயிரம் சிப்​பிகளால் நேர்த்​தி​யாக உரு​வாக்​கப்​பட்ட 40 அடி உயர சிலை​யும் நிறு​வப்​பட்​டுள்​ளது.

மங்​காரம் தோட்​டம் பகு​தி​யில் ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்​டு​களால் ஆன 15 அடி உயர விநாயகர் சிலை​யும், சி.ஐ.டி நகரில் ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்​டு​கள் மற்​றும் நாண​யங்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட சிலை​யும் பொது​மக்​கள் கவனத்தை ஈர்த்​துள்​ளன.

மேற்கு மாம்​பலம் லட்​சுமி நகரில், கருப்பு எள்​ளு, வெள்ளை எள்​ளு, பருப்பு வகைகள் உள்​ளிட்ட 160 கிலோ நவதானி​யங்​களால் 11 அடி உயரத்​தில் நவதானிய விநாயகர் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. மணலி​யில் 3,500 கடல் சிப்​பிகளால் 21 அடி உயரச் சிலை​யும், மணலி புதுநகரில் 15 ஆயிரம் மண் அகல் விளக்​கு​களால் 30 அடி உயரச் சிலை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், திரு.​வி.க. நகரில் 300 புட​வை​கள், 200 வேட்​டிகள் மற்​றும் 250 துண்​டு​களைக் கொண்டு ஆடை வடிவி​லான விநாயகர் பிர​திஷ்டை செய்​யப்​பட்​டுள்​ளது.

வீடு​களில் வைத்து வழிபட்ட சிறிய சிலைகளை பொது​மக்​கள் நீர்​நிலைகளி​லும் கடலிலும் கரைத்து வரு​கின்​றனர்.

பொது இடங்​களில் பிர​திஷ்டை செய்​யப்​பட்​டுள்ள பிரம்​மாண்ட விநாயகர் சிலைகள் அனைத்​தும் வரும் 19 மற்​றும் 20 ஆகிய தேதி​களில் மேள​தாளங்​கள் முழங்க பிரம்​மாண்ட ஊர்​வல​மாக எடுத்​துச் செல்​லப்​பட்​டு, சென்​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​ட 4 கடற்​கரைப்​ பகு​தி​களில்​ கரைக்​கப்​பட உள்​ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *