பள்​ளிக் குழந்​தைகளுக்கு சிக்கன் பிரி​யாணி வழங்​கலாம் என்ற விருப்​பம் முதல்​வருக்கு உள்​ளது; திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!!

சென்னை:
அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு சிக்கன் பிரி​யாணி வழங்​கும் திட்​டம் குறித்து சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறிய​தாவது: காலை உணவுத் திட்​டம் விரி​வாக்​கத்​தால் கூடு​தலாக 15.30 லட்​சம் மாணவர்​கள் பயன்​பெறு​வார்​கள்.

மாணவர்​களுக்கு ஊட்​டச்​சத்து கிடைப்​ப​தன் மூலம் கல்வி வளர்ச்சி அதி​கரிக்​கும்.

இதற்​காக பல்​வேறு துறை​கள் ஒருங்​கிணைந்து செயல்​பட்​டு, பள்​ளி​களில் சமையலறை, பாத்​திரங்​கள், கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​தும் பணி​கள் நடந்து வரு​கின்​றன.

புதிய உணவு வகைகள் பட்​டியல் உரு​வாக்க சிறப்​புக் குழு அமைக்​கப்பட உள்​ளது. பள்​ளிக் குழந்​தைகளுக்கு சிக்கன் பிரி​யாணி வழங்​கலாம் என்ற விருப்​பம் முதல்​வருக்கு உள்​ளது.

இத்​திட்​டம் பரிசீலிக்​கப்​பட்டு வரு​கிறது. சுகா​தா​ர​மான முறை​யில் சிக்​கன் பிரி​யாணி தயாரித்து வழங்​கு​வது குறித்து ஆய்வு செய்​து, மாணவர்​களுக்கு சிக்​கன் பிரி​யாணி வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும்.

தமிழகத்​தில் எப்​போதும் இரு​மொழிக் கொள்​கை​தான். அதில் அரசு உறு​தி​யாக உள்​ளது.

ஓராசிரியர் பள்​ளி​களில் மாணவர் – ஆசிரியர் விகிதத்தை சரிசெய்​யும் பணி நடந்து வரு​கிறது என்று அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *