மும்பை:
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள 20 பள்ளிகளை தனது கணவரும், நடிகருமான ரன்பீர் கபூருடன் சேர்ந்து சீரமைக்க இருப்பதாக நடிகை ஆலியா பட் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் 76-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மும்பையில் உள்ள 20 பள்ளிகளை தனது கணவரும், நடிகருமான ரன்பீர் கபூருடன் சேர்ந்து சீரமைக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நமது பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்த நாளைக் குறிக்கும் வகையிலும், ‘சேவா சங்கல்ப் அபியான்’ என்கிற நல்ல காரியத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலும், பிருஹன்மும்பை மாநகராட்சியின் பரிந்துரைகளின்படி 20 பள்ளிகளை சீரமைக்க நானும் ரன்பீரும் உறுதியளிக்கிறோம்.
இதன் மூலம், நமது குழந்தைகள் கற்றுத் தேறுவதற்கு பிரகாசமான, சிறந்த வசதிகள் கொண்ட இடங்களை உருவாக்க உதவுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.