உயி​ரினங்​களையும், மரங்​களையும், நேசிக்​கக் கூடியது தமிழ் மண்; கி.​ரா. விருது வழங்​கும் நிகழ்ச்​சி​யில் உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க.ம​காதேவன் பெருமிதம்!!

சென்னை:
தமிழ் மண் உயி​ரினங்​களை​யும், இயற்​கை​யை​யும் நேசிக்​கக் கூடியது என்று கோவை​யில் நடை​பெற்ற கி.​ரா. விருது வழங்​கும் நிகழ்ச்​சி​யில் உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க.ம​காதேவன் தெரி​வித்​தார்.

சக்தி மசாலா நிறு​வனம், விஜயா பதிப்​பகம் சார்​பில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிறந்த எழுத்​தாளர்​களுக்கு கி.​ரா. விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது.

கோவை அவி​நாசி சாலை​யில் உள்ள பிஎஸ்ஜி பொறி​யியல் கல்​லூரி​யில் கடந்த 27-ம் தேதி கி.​ரா. விருது வழங்​கும் விழா நடை​பெற்​றது.

இதில், புனிதவதி சிதம்​பரம் வரவேற்​றார். சக்தி மசாலா நிறு​வனங்​களின் நிறு​வனர் பி.சி.துரை​சாமி தலைமை உரை​யாற்​றி​னார். நடிகர் சிவகு​மார் பேசும்​போது, “இந்​தி​யா​வில் எழுத்​தாள​ருக்கு ரூ.5 லட்​சம் விருது வழங்கி கவுரவிக்​கப்​படு​வது அரி​தான​தாகும்.

சக்தி மசாலா நிறு​வனத்​தின் பி.சி.துரை​சாமி, சாந்தி துரை​சாமி ஆகியோரின் பங்​களிப்​புடன் இது சாத்​தி​ய​மாகி​யுள்​ளது” என்​றார்.

தொடர்ந்​து, எழுத்​தாளர் விக்​னேஷ் ஹரிஹரன் எழுத்​தாள​ரும், விரு​தாள​ரு​மான எம்​.கோ​பால​கிருஷ்ணனை அறி​முகம் செய்​து​ வைத்​தார்.

சக்தி மசாலா நிறு​வனங்​களின் நிறு​வனர் சாந்தி துரை​சாமி, எழுத்​தாளர் சு.வேணுகோ​பால் ஆகியோர் வாழ்த்​திப் பேசினர்.

எழுத்​தாளர் எம்​.கோ​பால​கிருஷ்ணனுக்கு கி.​ரா. விருது மற்​றும் சான்​றிதழ், ரூ.5 லட்​சத்​துக்​கான காசோலையை உச்ச நீதி​மன்ற நீதிபதி அரங்​க. மகாதேவன் வழங்கி பேசும்​போது, “ஒரு படைப்பு என்​பது சக மனிதர்​களை நேசிக்​க​வும், மனிதர்​களை எப்​படி புரிந்து கொள்ள வேண்​டும் என்​ப​தை​யும் நமக்கு போதிக்​கிறது.

தமிழ் மண் உயி​ரினங்​களை, மரங்​களை, இயற்​கையை நேசிக்​கக் கூடியது.

நாவல், கட்​டுரை, சிறுகதைகள், மொழிபெயர்ப்​பு​களில் எழுத்​தாளர் எம்​.கோ​பால​கிருஷ்ணன் தடம் பதித்​துள்​ளார்” என்​றார்.

நிகழ்ச்​சி​யில், எழுத்​தாளர் நாஞ்​சில் நாடன், விஜயா பதிப்​பக நிர்​வாகி சிதம்பரம் மற்றும் தமிழ் ஆர்​வலர்​கள், வாசகர்​கள் கலந்​து​ கொண்​டனர்.

பேச்​சாளர் இல.சிவசக்தி வடிவேல் நிகழ்ச்​சி​யைத் தொகுத்து வழங்​கி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *