சிக்மா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்; கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும் – ஜேசன் சஞ்சய்க்கு நடிகை ஜோதிகா வாழ்த்து!!

சென்னை:
சிக்மா படத்திற்கும் அதன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது திரைப்பட புரொமோஷன்களை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு பார்த்து வருகிறேன்.

நீங்கள் வளர்ந்திருக்கும் விதம், நேர்காணல்களில் உங்களின் பக்குவம், அமைதி மற்றும் இயல்புத்தன்மை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ஒரு சிறந்த மகனாக விளங்குகிறீர்கள்.

உங்களுக்குக் கிடைக்கும் இந்த வெற்றிக்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். சிக்மா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிய டைய வாழ்த்துகிறேன்.

கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும் என்றும் நடிகை ஜோதிகா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை ஜோதிகா, ஜேசன் சஞ்சய்யின் தந்தையான விஜய்யுடன் இணைந்து ‘குஷி’ (2000), ‘திருமலை’ (2003) போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜோதிகாவைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவும் ஜேசன் சஞ்சய் யின் இந்த புதிய முயற்சிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“சிறுவயதில் பார்த்த ‘குட்டி சஞ்சய்’ இப்போது இயக்குநராக மாறியிருப்பதை நம்ப முடியவில்லை” என சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கடத்தல் மற்றும் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த ஆக்ஷன் திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், ஷிவ் பண்டிட் மற்றும் ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இன்று வெளியானதை தொடர்ந்து ரசிகர்களிடம் ‘சிக்மா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *