தவெக ஆட்சியை கலைத்தால், அடுத்த நாளே பெண்கள் புரட்சி வெடிக்கும் ; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை!!

சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 1,276 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.117 கோடியே 7 லட்சம் வங்கி நிதி இணைப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இதில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான் மாநில பொருளாதாரத்தின் அடித்தளம்.

மகளிர் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும். நாங்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சிக்கு வரவில்லை. அப்படி நோக்கம் இருந்தால் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள். இப்படித்தான் 2026 தேர்தலில், முந்தைய அரசை தூக்கி எறிந்தார்கள்.

இந்த ஆட்சியைக் கலைத்து விடுவோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி ஆட்சியை கலைத்தால், அடுத்த நாளே பெண்கள் புரட்சி வெடிக்கும். தவெக தலைவர் விஜய், அனைவருடைய இல்லத்திலும் இருக்கிறார்.

இந்த ஆட்சியை உருவாக்கியவர்கள் பெண்கள். விஜய்யின் தைரியமும், வெற்றியும் பெண்கள் கொடுத்தது. இவ்வாறு பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *