தமிழகத்துக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்கு சென்று விட்டன ; திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

சென்னை:
“தமிழகத்துக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்கு சென்றுவிட்டன.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்” என தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

  1. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ஈகோவுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதல்வரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து ஷோ காட்டக் கிளம்பிவிட்டார்” எனத் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *