வரலாற்றில் டி20 கிரிக்கெட் 15 வயதில் கேப்டனாகி சூர்யவன்ஷி சாதனை!!

இந்தூர்: சையத் முஷ்​டாக் அலி டி20 தொடரில் நேற்று இந்​தூரில் சவுராஷ்டிரா – பிஹார் அணிகள் மோதின. இதில் பிஹார் அணி​யின் கேப்​டன் சூர்​ய​வன்ஷி களமிறங்​கினார். அவருக்கு வயது 15 ஆண்​டுகள், 232 நாட்​கள்.

இதன் வாயி​லாக ஆட​வர் டி20 கிரிக்​கெட் வரலாற்​றில் மிக இளம் வயதில் கேப்​டன் பொறுப்​பேற்ற வீரர் என்ற புதிய சாதனையை வைபவ் சூர்​ய​வன்ஷி படைத்​துள்​ளார்.

இதற்கு முன்​னர் குரோஷியா அணி​யின் ஜாக் வுகுசிக் 17 வயது, 311 நாட்​களில் கேப்​டனாக களமிறங்​கியதே சாதனையாக இருந்​தது.

இந்த சாதனையை அவர், கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி சைப்​ரஸ் அணிக்கு எதிரான டி20 போட்​டி​யில் நிகழ்த்​தி​யிருந்​தார். சூர்​ய​வன்ஷி பேட்​டிங்​கில் 12 பந்​துகளில் 18 ரன்​கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *