மதுரை செக்​கானூரணி காவல் நிலை​யத்​தில் உயி​ரிழந்த லாரி ஓட்​டுநரின் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்​கை​யில், அவரது உடலில் 5 இடங்​களில் காயங்​கள்!!

மதுரை:
மதுரை செக்​கானூரணி காவல் நிலை​யத்​தில் உயி​ரிழந்த லாரி ஓட்​டுநரின் உடல் பிரேதப் பரிசோதனை அறிக்​கை​யில், அவரது உடலில் 5 இடங்​களில் காயங்​கள் இருப்​ப​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

தேனி மாவட்​டம் தேவாரம் அருகே உள்ள டி.அழகர்​நாயக்​கன்​பட்​டியைச் சேர்ந்த ரங்​கப்​பன் மகன் பால​கிருஷ்​ணன் (42). இவர் தேவாரத்​தில் இருந்து மதுரைக்கு ஏலக்​காய் மற்​றும் பார்​சல்​களை ஏற்​றிச் சென்​றபோது, வாலாந்​தூர் கண்​மாய்க்​கரை அருகே கடந்த 4-ம் தேதி தீப்​பி​டித்து எரிந்​தது.

இது தொடர்​பான விசாரணைக்காக செக்​கானூரணி காவல் நிலை​யத்​துக்கு நவ. 13-ம் தேதி அழைத்து வரப்​பட்ட பால​கிருஷ்​ணன், அடுத்த நாள் (நவ. 14) அதி​காலை​யில் தூக்​கிட்​டுத் தற்​கொலை செய்து​கொண்​ட​தாக காவல்​துறை​யினர் தெரி​வித்​தனர். அவர் போலீ​ஸார் தாக்​கியதில் உயி​ரிழந்​தார் என அவரது உறவினர்​கள் குற்​றம் சாட்​டியுள்​ளனர்.

இந்​நிலை​யில், பால​கிருஷ்ணனின் பிரேதப் பரிசோதனை அறிக்​கையை மருத்​து​வ​மனை நிர்​வாகம் நேற்று வெளி​யிட்​டது. அந்த அறிக்​கை​யில் பால​கிருஷ்ணனின் உடலில் 5 இடங்​களில் காயங்​கள் இருப்​ப​தாக தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இது​குறித்து மருத்​து​வர்​கள் கூறிய​தாவது:கழுத்​துப் பகுதி​யில் கயிற்​றுத் தடத்​துக்​குக் கீழே 3 சிறிய சிராய்ப்​புக் காயங்​கள் இருந்​தன.

மண்டை ஓட்​டின் அடிப்​பகுதி, மேற்​பகுதி​யும் பாதிப்​பின்றி இருந்​தது. மூளை​யில் வீக்​கம் காணப்​பட்​டது. ரத்நாளங்​களில் ரத்த தேக்​கம் இருந்​தது.

வலது, இடது நுரையீரல்​களில் வீக்​கம் காணப்​பட்​டது. பல இடங்​களில் சிறிய ரத்த கசிவு புள்​ளி​கள் இருந்​தன.

இதயத்​தில் ரத்த கசிவு, ரத்த கட்​டிகள் இருந்​தன. வயிற்​றின் உட்​புறச் சவ்​வில் ரத்​தம் தேங்கி இருந்​தது. உடலின் தசைகள், எலும்பு பகுதி​களில் 5 இடங்​களில் காயங்​கள் இருந்​தன.

இவற்​றின் மூலம் உடனடி இறப்​புக்​கான இறுதி காரணத்தை தெரி​விக்க முடி​யாது. வேதி​யியல் பகுப்​பாய்வு, திசு ஆய்வு அறிக்​கைகள் கிடைத்த பிறகே இறப்​புக்​கான காரணம் தெரிய வரும் என தெரி​வித்​துள்​ளனர்.

முன்​னதாக, சம்​பந்​தப்​பட்ட காவலர்​கள் மீது கொலை வழக்​குப் பதிவு செய்து, அவர்​களை கைது செய்ய வேண்​டும் என வலியுறுத்தி பால​கிருஷ்ணனின் உறவினர்​கள் அரசு மருத்​து​வ​மனை முன் நேற்று மதி​யம் மறியலில் ஈடு​பட்​டனர்.

மறியலில் ஈடு​பட்ட பால​கிருஷ்ணனின் மனைவி, மகன் உள்​பட உறவினர்​கள் அனைவரை​யும் போலீ​ஸார் வலுக்​கட்​டாய​மாக கைது செய்துவாக​னத்​தில் ஏற்​றினர்.

போலீஸ் வாக​னம், காந்தி அருங்​காட்​சி​யகம் அருகே வந்​த​போது திடீரென வாக​னத்​தி​லிருந்து பால​கிருஷ்ணனின் மகன் விகாஷ் சாலை​யில் குதித்​தார். போலீஸ் வாக​னத்​தின் அடி​யில் படுத்த விகாஷ், ‘எனது தந்​தையை காவல்​துறை​யினர் அடித்​துக் கொன்​று​விட்​டனர்.

என்​னையும் கொன்​று​விடுங்​கள்’ என்​றார். அவரை அங்​கிருந்து அப்​புறப்​படுத்​திய போலீ​ஸார், தனி வாக​னத்​தில் அழைத்​துச் சென்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *