வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: தமிழக மாணவர் குழு சந்திப்பில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு

புதுடெல்லி:
தேசிய ஒற்​றுமையை வலுப்​படுத்தி, வளர்ச்சியடைந்த பாரதத்தை உரு​வாக்க இளைஞர்​கள் முன்​வர வேண்​டும் என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்​துள்​ளார்.

யுவ சங்​கம் எனும் திட்​டத்​தின் கீழ் தமிழ்​நாட்​டி​லிருந்து 50 மாணவர்​கள் டெல்​லிக்கு அழைத்து வரப்​படு​கின்​றனர். இதேபோல், டெல்​லி​யி​லிருந்​தும் தமிழ்​நாட்​டுக்கு 50 மாணவர்​கள் அனுப்பி வைக்​கப்​படு​கின்​றனர்.

இந்த திட்​டத்​தின் ஏழாம் கட்டமாக தமிழ்​நாட்​டி​லிருந்து மாணவர்​கள் குழு டெல்லி வந்துள்ளது. அவர்​களை குடியரசுத் துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்​ணன் சந்​தித்து உரையாடினார்.

குடியரசு துணைத் தலை​வர் மாளி​கை​யில் நடை​பெற்ற இந்த சந்திப்​பில் சி.பி.ராதாகிருஷ்​ணன் பேசிய​தாவது:

இளைஞர்களுடன் கலந்​துரையாடுவது எப்​போதும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்று. அதிலும் எனது சொந்த மாநிலமான தமிழ்​நாட்​டி​லிருந்து வந்​துள்ள இளம் தலைமுறை​யினரைச் சந்திப்பது கூடுதல் மகிழ்ச்​சி​யையும் நெகிழ்ச்​சி​யையும் அளிக்​கிறது.

எனது தமிழ்​நாட்​டுப் பயணத்​தின்​போது ஊடகங்​களிடம் பேசியபோது, தமிழ்​நாட்​டைச் சேர்ந்த ஒரு​வரும் இந்​தி​யாவின் பிரதம​ராகும் வாய்ப்பு உள்​ளது எனக் குறிப்​பிட்​டிருந்​தேன்.

இதுவே பாரதத்​தின் ஜனநாயக வலிமையையும், நாட்​டில் அனைவருக்​கும் கிடைக்​கும் சமமான வாய்ப்​பு​களை​யும் எடுத்​துக்​காட்​டு​கிறது.

பசும்​பொன் முத்​துராமலிங்​கத் தேவர், பெருந்​தலை​வர் காம​ராஜர், இமானுவேல் சேகரன், திருப்​பூர் குமரன், வ.உ. சிதம்​பரம் பிள்ளை போன்ற தொலைநோக்​குப் பார்​வையும் வலு​வான தேசிய உணர்வும் கொண்ட தலை​வர்​களின் சிந்​தனைகளை​யும், நாட்​டுப் பற்​றையும் இன்​றைய இளைஞர்​கள் தங்​களின் வழிகாட்​டி​யாகக் கொள்ள வேண்​டும். தேசிய ஒற்​றுமையை வலுப்​படுத்தி, வளர்ச்சியடைந்த பாரதத்தை உரு​வாக்க இளைஞர்​கள் முன்​வர வேண்​டும்.

மகாகவி சுப்​பிரமணிய பாரதி​யாரைப் போன்ற மாபெரும் தேசியக் கவிஞரைக்​கூட அவரது சாதிப் பின்​னணி​யைக் காரணம் காட்டி சிலர் உரிய முறை​யில் போற்​று​வதில்லை.

மாமனிதர்களின் பங்​களிப்​பு​களை சாதி போன்ற குறுகிய அடையாளங்​களின் அடிப்​படை​யில் மதிப்​பிடும் மனப்​பான்மை சமூகத்​தின் முன்​னேற்​றத்​துக்கு உதவாது.

நாட்​டுக்​கும் மனிதகுலத்துக்​கும் அவர்​கள் ஆற்​றிய தொண்​டின் அடிப்படையிலேயே அவர்​களின் பெரு​மையைப் போற்ற வேண்டும். இவ்​வாறு அவர் பேசினார்.

மத்​திய கல்வி அமைச்​சகத்​தால் ‘ஒரே பாரதம் உன்ன பாரதம்’ திட்டத்​தின் கீழ் யுவசங்​கம் ஏழாம் கட்​டப் பரிமாற்​றத் திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது.

இதன்படி, அக்​டோபர் 26 முதல் நவ.1, 2026 வரை, டெல்லி பல்​கலைக்​கழகம் திரு​வாரூரி​லிலுள்ள தமிழ்​நாடு மத்​தி​யப் பல்​கலையுடன் இணைந்து தமிழக மாணவர் குழுவினரை வரவேற்று உபசரிக்​கிறது.

இந்​நிகழ்ச்​சி​யில் டெல்லி பல்​கலைக்​கழகத் துணைவேந்​தர் பேராசி​ரியர் யோகேஷ் சிங், அகில இந்​திய தொழில்​நுட்​பக் கல்விக் குழு​வின் உறுப்​பினர் செயலர் பேராசி​ரியர் ஷியாமாராத், உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். முன்​னதாக, தமிழ்​நாட்​டின் மாணவர்​கள் டெல்​லி​ முதல்​வர் ரேகா குப்​தாவை சந்​தித்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *