விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகையை நாளை விடுவிக்கும் பிரதமர் மோடி!!

காந்தி நகர்,
விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகையை பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்.

விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டப்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 23 தவணைகளாக 4.47 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு பிஎன் கிசான் திட்டத்தின் 24வது தவணைத்தொகை நாளை விடுவிக்கப்படுகிறது.

குஜராத் மாநிலம் பில்டி நகரில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு 24வது தவணத்தொகையாக 18 ஆயிரத்து 680 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.

குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டும் பிஎம் கிசான் திட்டத்தில் 52.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,051 கோடி தவணைத்தொகை விடுவிக்கப்பட உள்ளது.


அதேவேளை, 2 நாட்கள் பயணமாக நாளை குஜராத் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *