மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் பிரச்சினை, சாலை வசதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் – முதல்வர் விஜய் உத்தரவு!!

சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடா்பான முன்மொழிவுகள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மின்தடை விவகாரம் பெரிதாக உள்ளதால் பேட்டரி எரிசக்தி சேமிப்புத் திட்டத்தை ஊக்குவிக்கும் முக்கிய முடிவுகள், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடவடிக் கைகள், தோ்தல் வாக்குறுதிகள் மற்றும் துறைவாரியான இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் சட்டம் – ஒழுங்கு நிலவரம் தொடா்பாகவும் வருவாய்த் துறை சார்பாக ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது, சமூக நீதி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் 3 முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி, மக்களுக்கு என்ன தேவையோ அதற்குத்தான் அமைச்சர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் அனைவரும் செயல்பட வேண்டும்.

மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் பிரச்சினை, சாலை வசதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *