பக்தர்களுக்காக அற்புதங்களை நிகழ்த்தும் சாய்பாபா

1910&ம் ஆண்டு தீபாவளி நேரம். அது விடுமுறைக் காலமும் கூட.

துவாரகாமய்யில் நெருப்பு குண்டமான தூணிக்கு அருகிலேயே அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார் சாயி பாபா.

ஒளி பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த தூணியில் விறகுகளை நுழைத்துக் கொண்டிருந்தார் சாயிபாபா.

அதே நேரத்தில் நீரடியில் சிறிது தூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்தில் ஒரு கொல்லனின் மனைவி உலைக் களத்தில் உள்ள துருத்தியில் கடமையாற்றிக் கொண்டு இருந்தாள்.

அந்த நேரத்தில் அவள் கணவர் ஏதோ ஒரு கடமைக்காக அவளை அழைத்தார்.

இடையில் குழந்தை இருப்பதை மறந்து “சாயி” என்று கூறியவாறு அவசரமாக வேகமாக விவேகம் இழந்து ஓடினாள்.

அதன் காரணமாக ஊது உலைக்களத்தில் குழந்தை நழுவி விழுந்து விட்டது. “சாயி” என்று பாபா நாமத்தை உச்சரித்தாள்.

அதே நேரத்தில் சாயிபாபா தமது கைகளை தூணியில் நுழைக்கிறார்.

கைகள் கருகின. ஏன் பாபா இவ்வாறு செய்தார் என்று யாருக்கும் புரியவில்லை.

அவருக்கு அருகில் இருந்த மாதவ்ராவும், தேவ்பாண்டேயாவும் உடனே நிலையை கண்டு உணர்ந்து, சாயிபாபாவைப் பின்னால் இழுத்து “சுவாமி ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.

இங்கு இருந்து சிறிது தூரத்தில் எனது பக்தையின் குழந்தை தவறி எரிந்து கொண்டிருக்கும் உலைக் களத்தில் விழுந்துவிட்டது.

ஆகவே தான் அதைக்காப்பாற்ற இங்கு தீயில் கைகளை விட்டேன் என்றார் சாயிபாபா.

அனைவருக்கும் குழந்தையைக் காப்பாற்ற பாபா செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள்.

“எனது கரங்கள் கருகிப் போனால் என்ன? மருந்து தான் உள்ளதே! குழந்தை (மறந்து தீயில் விழுந்த குழந்தை) தியில் வெந்து போனால் பிறகு நொந்து என்ன பயன்? என்று கூறி அருளினார்.

இந்த சம்பவம் மூலமாக பாபாவின் பெருங்கருணையும் அவர் இங்கு அங்கு என்று இல்லாமல் எங்கும் நிறைந்தவர் என்பதும், ஆபத்தில் விரைந்து வருவார் என்பது தெரிய வருகிறது அல்லவா?

தாய் என்றும் சேயின் நினைவே கொண்டது போல், பக்தையின் குழந்தைக்காக தனது கரத்தையே கருகச் செய்தார். சாபிபாபா.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *