நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட கால நண்பருக்கும் வருகிற டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்!!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட கால நண்பருக்கும் வருகிற டிசம்பரில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதேபோல் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

பல்வேறு திரைப்பட விருதுகளை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இதுபோன்று தகவல் பரவிய நிலையில், இதனை கீர்த்தி சுரேஷின் தந்தை மறுத்து வந்தார். இந்த நிலையில், வருகிற டிசம்பர் மாதம் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக பழகி வருவதாக கூறப்படுகிறது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் வருகிற டிசம்பர் மாதம் 11ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணத்தில் பெரிய அளவிலான திரைபிரபலங்கள் இல்லாமல் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *