முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு!!

சென்னை:
முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ. 102 கோடி ஒதுக்கீடு. தரமான விதைகள் வழங்க ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ. 24 கோடி மானியம் வழங்கப்படும்.

1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில் ரூ. 22.80 லட்சம் மானியம் வழங்கிடப்படும். இத்திட்டத்துக்கு ரூ. 22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும்.

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்த்தப்படும்.

முதலமைச்சர் மன்னுயிர் காப்போம் திட்டம், ரூ. 146 கோடி செலவில் இந்த ஆண்டும் செயல்படுத்தப்படும்.

கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ. 269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இத்திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டது என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *