சென்னை:
கலைஞர் கைவினை திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவுசார் சொத்து உரிமையான புவிசார் குறியீடு பெறுவதற்கான மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
அம்புத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.
காஞ்சிபுரத்தின் பழந்தண்டலத்தில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். காக்கலூர் தொழிற்பேட்டையில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் ரூ.3.90 கோடி செலவில் அமைக்கப்படும்.
குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உள்நாட்டில் நடைபெறும் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.