இந்த வார விசேஷங்கள் (29-4-2025 முதல் 5-5-2025 வரை)

29-ந் தேதி (செவ்வாய்)

  • கார்த்திகை விரதம்.
  • ராமநாதபுரம் சொக்க நாதசுவாமி கோவிலில் சித்திரை உற்சவம் ஆரம்பம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சித்திரை பெருவிழா தொடக்கம்.
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.
  • கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (புதன்)

  • அட்சய திருதியை.
  • முகூர்த்த நாள்.
  • நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் உற்சவம்.
  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி.
  • மேல்நோக்கு நாள்.

1-ந் தேதி (வியாழன்)

  • சதுர்த்தி விரதம்.
  • திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி திருக்காட்சி.
  • வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.

*ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகர் அன்ன வாகனத்தில் பவனி.

  • சமநோக்கு நாள்.

2-ந் தேதி (வெள்ளி)

  • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் விழா தொடக்கம்.
  • திருத்தணி சிவபெருமான் வெள்ளி சூரிய பிரபையில் பவனி.
  • சீர்காழி சிவபெருமான் திருமுலைப்பால் காட்சி.
  • மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (சனி)

  • சஷ்டி விரதம்.
  • தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்.
  • திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.
  • இலஞ்சி சிவபெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
  • சமநோக்கு நாள்.

4-ந் தேதி (ஞாயிறு)

  • முகூர்த்த நாள்.
  • நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் பவனி.
  • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
  • ஆறுமுகமங்கலம் ஆயிரத்தொன்று விநாயகப்பெருமான் மூசிக வாகனத்தில் பவனி.
  • மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (திங்கள்)

  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நந்தீசுவர யாளி வாகனத்தில் பவனி.
  • கடையம் சிவபெருமான் இந்திர விமானத்தில் உலா.
  • சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
  • கீழ்நோக்கு நாள்.
SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *