விசுவாவசு ஆண்டு ஐப்பசி-25 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி காலை 7.06 மணி வரை. பிறகு சப்தமி நாளை விடியற்காலை 4.46 மணி வரை.
நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.13 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோளிங்கபுரம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் பக்நோசிகப் பெருமாளுக்கு திருக்கல்யாணம். திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசங்கரநயினார் கோவில் ஸ்ரீஅம்பாள் பவனி.
திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதர் கருட வாகனத்தில் பவனி. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. மயிலாடுதுறை ஸ்ரீகவுரிமாயூரநாதர் பூதம் பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மயிலம்மன் புறப்பாடு. திருவட்டாறு ஸ்ரீஐடாதீஸ்வரர் கோவில் ஸ்ரீசிவபெருமானுக்கு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மனுக்கு வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீஆண்டாளுக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீசத்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-நம்பிக்கை
கடகம்-சாதனை
சிம்மம்-தாமதம்
கன்னி-வெற்றி
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- மேன்மை
மகரம்-நிறைவு
கும்பம்-ஆதாயம்
மீனம்-புகழ்