சென்னை:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் தோல்வியை தழுவியதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார்.
இதனையடுத்து பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாண்ட்யாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.