ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன.
நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 41 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.அவரது ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.
அந்த அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 153 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் தனது 41-வது வயதிலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.