பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்.!!

சென்னை:
பேருந்து இயக்​கத்​தின்​போது ஓட்​டுநர்​களை கண்​காணிக்​கும் ஏஐ தொழில்​நுட்​பத்தை அண்ணா பல்​கலைக்​கழக மாணவர்​கள் கண்​டு​பிடித்​துள்​ளனர்.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில் சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் பயணி​கள் வாகன கண்​காட்சி நடை​பெற்​றது.

இதில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த ஜான் மோசஸ், கபில் ப்ரீத்​தம், ஹரிஷ், கிஷோர் ஆகியோர் தங்​களது கண்​டு​பிடிப்​பான பேருந்து இயக்​கத்​தின்​போது ஓட்​டுநர்​களை கண்​காணிக்​கும் ஏஐ தொழில்​நுட்​பத்தை காட்​சிப்​படுத்​தி​யிருந்​தனர்.

அழுத்தம் மூலம் உணரும்: இது தொடர்​பாக குழு​வைச் சேர்ந்த மூன்​றா​மாண்டு கணினி பொறி​யியல் அறி​வியல் மாணவர் ஜான் மோசஸ் கூறிய​தாவது:

எங்களது ஏஐ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​தும்​போது, பேருந்து இயக்​கத்​தில் ஓட்​டுநருக்கு லேசான மயக்​கம் போன்​றவை ஏற்பட்டால் தானாகவே வேகத்தை குறைத்​து, சாலை​யோரத்​தில் பேருந்து நிறுத்​தப்​படும். உடனடி​யாக பேருந்து உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்​கப்​படும்.

ஓட்​டுநருக்கு ஏற்​படும் உடல் நலப் பிரச்​சினையை அவர் பேருந்து உபகரணங்​கள் மீது செலுத்​தும் அழுத்​தத்​தின் அளவை வைத்து உணரும் வகை​யில் தொழில்​நுட்​பம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், பிரேக் எப்​போது செயலிழக்​கும் என்​பதை ஓராண்​டுக்கு முன்​ன​தாகவே அறிவிக்​கும் வகை​யில் பேருந்​தின் அனைத்து அமைப்​பை​யும் முழு​மை​யாக கண்​காணிக்​கும். இவை பொதுப் போக்​கு​வரத்து வாக​னங்​களுக்​காக பிரத்​யேக​மாக வடிவமைக்கப்பட்​டுள்​ளன.

இந்த நவீன தொழில்​நுட்​பத்தை பழைய பேருந்​துகளில் பொருத்த ரூ.1.50 லட்​சம் வரை செல​வாகும். புதிய பேருந்​துகளில் பொருத்து​வதற்​கான செலவு சற்று குறை​யும்.

இவ்​வாறு அவர் தெரி​வித்​தார் மற்​றொரு கண்​டு​பிடிப்பு குறித்து மாணவர் கபில் ப்ரீத்தம் கூறும்​போது, “அதிநவீன கேமரா கொண்ட ரோவர் அமைப்​பு, பேருந்​தின் அடி​யில் சென்று பழுதை கண்​டறி​யும்.

மேலும், அதை சரிசெய்ய அரு​கில் உள்ள பராமரிப்பு மையத்​துக்​கும் ஓட்​டுநருக்கு வழி​காட்​டும்​” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *