சென்னை,
நிகிலின் வரலாற்று அதிரடி படமான ‘சுயம்பு ‘நீண்ட காலமாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது. முன்னதாக, டீசர் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால் அது நடக்கவில்லை. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், இறுதியாக இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 13-ம் தேதி வெளியாகிறது. இதனால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சுயம்பு படத்தை பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ளார், பிக்சல் ஸ்டுடயோஸின் கீழ் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரித்துள்ளனர்.
சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். கேஜிஎப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.