வரும் சட்​டப்பேர​வைத் தேர்​தலில் மேற்கு வங்கத்தில் பாஜகவை மீண்​டும் தோற்​கடிப்​பார் மம்தா – அகிலேஷ் யாதவ் பேச்சு!!

கொல்கத்தா:
சமாஜ்​வாதி கட்​சி​யின் தேசி​யத் தலை​வரும் மக்​களவை உறுப்​பினரு​மான அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்​பிள் யாதவ், அவர்​களது குடும்ப நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்​வதற்​காக மேற்கு வங்​கத்​தின் தலைநகர் கொல்​கத்​தாவுக்​குச் சென்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், அம்மாநில முதல்​வர் மம்தா பானர்​ஜியை தலை​மைச் செயல​கத்​தில் அகிலேஷ் யாதவ் நேற்று மதி​யம் சந்​தித்துப் பேசி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அகிலேஷ் யாதவ் கூறிய​தாவது: சகோ​தரி (மம்தா) அமலாக்​கத்​ துறையை வீழ்த்​தி​யுள்​ளார், வரும் சட்​டப்பேர​வைத் தேர்​தலில் அவர் பாஜகவை மீண்​டும் தோற்​கடிப்​பார் என்​ப​தில் நாங்​கள் உறு​தி​யாக இருக்​கின்​றோம்.

எங்​களு​டைய சந்​திப்பு வெறும் மரி​யாதை நிமித்​த​மான சந்​திப்​பு​தான். அரசி​யல் எது​வும் இல்​லை.

மம்தா அன்பு, சகோ​தரத்​து​வத்​தைப் பற்​றிப் பேசுகிறார். ஆனால் பாஜக பிளவுபடுத்​தும் அரசி​யலை முன்​னெடுத்து வரு​கிறது.

பாஜக, சிறப்பு வாக்​காளர் திருத்​தப் பணி​கள் மூலம் தனது வாக்​கு​களை அதி​கரிக்க முயற்​சிக்​க​வில்​லை.

ஆனால், பாஜக​வின் எதிர்ப்​பாளர்​களின் வாக்​கு​களைக் குறைக்க அக்​கட்சி முயற்​சிக்​கிறது. ஜனநாயகத்​தைக் காப்​பாற்ற மம்தா எடுக்​கும் முயற்​சிகளுக்கு துணை நிற்​போம்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *