சென்னை:
நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம், ‘கொம்புசீவி’.
பொன்ராம் இயக்கும் இதில் சரத்குமார் முக்கிய கேரக்டரிலும் புதுமுகம் தார்னிகா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு பால சுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி.செல்லையா தயாரிக்கிறார்.
தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை பேசும் இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் அதிரடி ஆக் ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள படக்குழு, படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது.