சென்னை:
இறுதிச் சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என பலர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷின் 100-வது படமான இதை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள இதிலிருந்து, அடியே அலையே, ரத்னமாலா ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
பொங்கலை முன்னிட்டு ஜன.14-ம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளார். அதற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.