“இஞ்சி, சுக்கு, கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்” – ஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர் பரிந்துரைத்த 48 நாள் முறை !!

“காலையில் இஞ்சி, பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஊன்றுகோல் இன்றி நடக்கலாம்” எனச் சித்தர்கள் பாடியுள்ளனர். இந்த 48 நாள் முறையை பின்பற்றுவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் தோலை நீக்கி சாறு எடுத்த இஞ்சியின் தெளிந்த சாற்றை வெறும் வயிற்றில் பருகலாம்.இதன்பிறகு, 30 முதல் 45 நிமிடங்கள் கழித்தே காலை உணவு உண்ண வேண்டும்.

பகல் அல்லது மாலையில் ஒரு தேக்கரண்டி சுக்கு பொடியை அதே அளவு பனைவெல்லம் கலந்து கொதிக்க வைத்துக் குடிக்கலாம். அலுவலகத்தில் இருப்பவர்கள் இதை மாலை நேரத்தில் சுக்கு காபியாகவும் அருந்தலாம்.

இரவு உணவுக்குப் பின் விதை நீக்கி பொடி செய்த ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடியை வெந்நீருடன் கலந்து சாப்பிடலாம். “கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்” என்ற பழமொழி அதன் சிறப்பை உணர்த்தும்.

அல்சர் உள்ளிட்ட வயிற்று பிரச்சினைகள் உள்ளவர்கள் இஞ்சி மற்றும் சுக்கின் காரத்தன்மை காரணமாக இந்த முறையை தவிர்ப்பது நல்லது. மேலும் இதை சாப்பிடும் முன் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிப்பதும் நல்லது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *